Wish List 0

Download Our Catalog

About Us

“எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே விடுத்த வாய்மொழிக் கெங்கெனும் வெற்றி...” எனும் பாரதியின் வீரியமிக்க வரிகளே என் வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய படிக்கட்டுகளாக வரித்துக்கொண்டேன். பாரதியின் தன்னம்பிக்கை வரிகள் மட்டுமே மூலதனமாய் கொண்டு சென்னை நோக்கிப் பயணம்... இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கும் கவிதா பப்ளிகேஷன் எனும் நிறுவனம். ஆரம்பம் முதலே அச்சகம், பதிப்பகம் என புத்தகம் சார்ந்த வேலையில் இருந்ததால் இன்னும் அதிக ஈடுபாட்டுடனும் அதிக முனைப்புடனும் இப்பதிப்புத் துறையில் தடம் பதிக்க முடிந்தது. ஆரம்பத்தில் சிறு சிறு புத்தகங்களை வெளியிட்ட கவிதா பப்ளிகேஷன் , இன்று எழுத்துலக ஜாம்பவான்களின் புத்தகங்களை வெளியிடுவதில் பெருமையும் , பெருமகிழ்ச்சியும் அடைகிறது. “படிக்க .. பரிசளிக்க .. பயன்பெற..” இதுதான் கவிதா பப்ளிகேஷனின் தாரக மந்திரம் நல்ல தரமான நூல்களைப் படித்து அந்நூல்களை மற்றவர்க்கு பரிசளித்து மகிழ்ந்து அனைவரும் பயன்பெற வேண்டும் எனும் நன்முயற்சி.. “கவிதாவின் கவின்மிகு வெளியீடுகள்” எனும் வரிகளுக்கு ஏற்ப புத்தகத்தின் தரம் (Quality) என்றும் உயர்ந்தே இருக்கும். மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடுவதில் ஆர்வம் மிகுந்ததின் வெளிப்பாடு ஓஷோவின் நூல்களை தமிழில் வெளியிட்டோம், நல்ல வரவேற்பு கிடைத்தது . அதிக அளவில் விற்பனையாகும் நூல்களின் வரிசையில் ஓஷோவின் நூல்களும் இடம்பெற்றுள்ளன. மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து நல்ல நூல்களை பதிப்பித்த நாங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளோம். பொன்னியின் செல்வன் ஆங்கிலத்தில் வேண்டும் என வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆங்கிலத்தில் வெளியிட்டோம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்வளிக்கும் செயல். எழுத்துலக ஜாம்பவான் திரு. ஜெயகாந்தனின் அனைத்து சிறுகதைகளையும் ஒன்றாக தொகுத்து முழு தொகுப்பாக வெளியிட்டோம். இதனைப்போலவே திரு. அசோகமித்திரன், திரு. இந்திரா பார்த்தசாரதி , திரு. பிரபஞ்சன் , திரு. மாலன், திரு. சா. கந்தசாமி இவர்களின் படைப்புகளும் தொகுப்புகளாக வெளியிட்டுள்ளோம். எங்களது அனைத்து எழுத்தாளர்களின் ஒத்துழைப்புடனும், அன்பான வாசகர்களின் ஊக்குவிப்பாலும் 43 ஆண்டுகளைக் கடந்து பொன் விழா ஆண்டை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது....